2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சுகாதாரம், பொறியியல், உயர் கல்வி துறைகளின் மேம்பாட்டுக்கு ஈரானிய அரசாங்கம் உதவி வழங்கும்

Super User   / 2012 மே 24 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சுகாதாரம், பொறியியல் மற்றும் உயர் கல்வி ஆகிய துறைகளின் மேம்பாட்டுக்கு ஈரானிய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் எம்.என் ஹசன் பூரி தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்  ஜோன் செனவிரத்ன மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோருடனான சந்திப்பின் போதே ஈரானிய தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

துரித அபிவிருத்தி கண்டுவரும் இலங்கiயின் பல்வேறு துறைகளிலும் முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கை - ஈரான் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் சார்பில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் செயலாளராக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.

சுமார் ஒரு மணித்தியாலயம் இடம்பெற்ற பங்கேற்றுள்ளனர். இந்தசந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்தும் பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. (பிரதியமைச்சரின் ஊடக பிரிவு)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X