2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சீன உணவுவிடுதியின் உரிமையாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

Super User   / 2012 மே 30 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                      (லக்மால் சூரியகொட)

அனுமதிப்பத்திரமின்றி பியர் விற்பனை செய்தமை, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட சீன உணவு விடுதியொன்றின் உரிமையாளருக்கு  கொழும்பு கோட்டை நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, 6 மாத சிறைத்தண்டனையும் 160,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

லிங் சூ பின் எனும் இச்சந்தேக நபர், கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  இவர் கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது.  இவர் ஏற்கெனவே இலங்கை நீதிமன்றங்களில் இது போன்ற வழக்குகளில் 5 தடவை குற்றவாளியாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் மேற்படி பியரையும் சிகரெட்டுகளையும் சந்தேக நபர் தனது சொந்தப் பாவனைக்காக வைத்திருந்தார் என அவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார்.

  Comments - 0

  • KALAI Thursday, 31 May 2012 01:11 AM

    சிறந்த நடவடிக்கை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X