2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் புண்ணிய கிராமம் செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 03 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்துடன் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை புண்ணிய கிராமம் - 2012 செயலமர்வை நடத்;தியது.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை ஹேன்முல்லையில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரி அம்மன் ஆலயத்தில்  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்  கலாபூஷணம் குமாரசாமி சோமசுந்தரம்,  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் தேவகுமாரி ஹரன்,  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் நிர்மலா கருணானந்த ராஜா ஆகியோர் சிறப்புத் தலைப்புக்களில் உரையாற்றினர்.

கொச்சிக்டை விவேகானந்த அறநெறிப் பாடசாலை மற்றும் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்  இடம்பெற்றன.




  Comments - 0

  • Navaratnam Sunday, 10 June 2012 02:10 PM

    நல்ல செய்தி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X