2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஒரு சடலத்துக்கு உரிமை கோரும் இரு பெண்கள்

Super User   / 2012 ஜூன் 14 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லால் எஸ்.குமார்)

வாகன விபத்தில் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற ரயில் நிலைய அதிபரின் சடலத்திற்காக இரு பெண்கள் உரிமை கோரியுள்ளனர்.

இதனால், சட்ட ரீதியான மனைவியிடம் குறித்த சடலத்தை ஒப்படைப்பதற்காக நீதிமன்றத்தின் உதவியை கிரிபத்கொட பொலிஸார் நாடியுள்ளனர்.

கொழும்பு கண்டி வீதியிலுள்ள களனி பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய 62 வயதான முன்னாள் ரயில் ஊழியரான பொடிமஹத்தயா ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

புகையிர சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் திருகோணமலை மற்றும் மருதானை ஆகிய ரயில்  நிலையங்களில் கடமையாற்றியுள்ளார்.

குறித்த இரண்டு பெண்களும் தாமே இறந்தவரின் மனைவி என தெரிவிப்பதுடன் சடலத்தை எடுத்து செல்ல உரிமை கோருகின்றனர்.
 
இதனால் சட்ட ரீதியான மனைவியிடம் குறித்த சடலத்தை கையளிப்பதற்காக மஹர நீதவானின் அனுமதியை கோரியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X