2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கத்திமுனையில் தங்கச்சங்கிலி கொள்ளையிட முயன்ற இரு இளஞர்கள் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 15 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

கத்திமுனையில் ஒருவரின் தங்கச்சங்கிலியை கொள்ளையிட முயன்ற இரண்டு இளைஞர்கள் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு நையப்படைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நிர்கொழும்பு, தளுபத்தை பிரதேசத்தில் இடம்பெற்றது.

நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் தளுபத்தை பாலம் அருகில் உள்ள வீடொன்றிற்கு இன்று முற்பகல் 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அந்த வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுவதற்கு நாய்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

நாய்கள் வாங்க வந்தவர்களை போன்று நடித்த அந்த இளைஞர்க்ள திடீரென்று வீட்டுரிமையாளரை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த 5 பவுண் தங்கச் சங்கிலியை கத்தியினால் அறுத்துள்ளனர்.

இதன் போது வீட்டுரிமையாளரின் மகள் சத்தமிடவே அயலில் இருந்த உணவகம் மற்றும் கடைகளில் இருந்தவர்கள் ஒடி வந்து இரு இளைஞர்களையும் சிரமப்பட்டு பிடித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் அவர்களை கத்தியால் தாக்க முயன்ற போதும் அது பயனளிக்காது போயுள்ளது.

இந்நிலையில் அங்கு கூடிய பிரதேசவாசிகள் அந்த இருவரையும் நையப்புடைத்த பின்னர் நீர்கொழும்பு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இரு இளைஞர்களையும் கைது செய்ததோடு கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X