2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மயானங்களின் விபரங்கள் கணினிமயமாக்கப்படும்

Super User   / 2012 ஜூன் 16 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள மயானங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய கணினி தரவுதரளமொன்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளன. கல்லறைகளுக்கான இடங்கள் சட்டவிரோதமாக வேறு நபர்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதே இதன் நோக்கமாகும். சுமார் 100 வருடங்களாக இவ்வாறான சட்டவிரோத பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரியான பிரதீப் காரியவஸம் இது தொடர்பாக கூறுகையில், இந்நடவடிக்கை மூலம் உண்மையான உரிமையாளர்களை அதிக சிரமமின்றி கண்டறியலாம் என்றார்.
ஆயிரக்கணக்கான கல்லறை மனை உரிமையாளர்கள் மாநகரசபைக்கு அறிவிக்காமல் சட்டவிரோதமாக அவற்றை வேறு நபர்களுக்கு மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்ட அதிகாரியின் அனுமதியைப் பெறுவதில் சரியான நடைமுறைகளை இவ்வுரிமையாளர்கள் பலர் பின்பற்றுவதில்லை என அவர் கூறினார். இவற்றை இடமாற்றுவோர் குறித்த மயானத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு அறிவிப்பதுடன் மாற்றங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகர சபையின் சட்ட அதிகாரியின் அங்கீகாரத்திற்காக அனுப்ப வேண்டும் எனவும் டாக்டர் காரியவசம் தெரிவித்தார்.
சில கல்லறை மனைகள் 100 வருடங்களுக்கு முன்னர் விற்கப்பட்டதாகவும் 1952 ஆம் ஆண்டின்பின்னர் கனத்தை பொது மயானத்தில் கல்லறை மனை எதுவும் கொள்வனவு செய்யப்படவில்லை. சட்டவிரோத பரிமாற்றங்கள் பல தசாப்தங்களாக நடைபெறுகிறது என அவர்கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X