2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தனியார் மருத்துவ கல்லூரிக்கு அமைச்சர்கள் இருவர் எதிர்ப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஸ்தாபிப்பதற்கு இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தனியார் மருத்துவ கல்லூரி மூலம் நாட்டிலுள்ள இலவச கல்வி முறைக்கு அடி விழும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே அரச தரப்பு நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக உரையாற்றியுள்ளனர்.

இதேவேளை, தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஒத்திவைப்பு பிரேரணையொன்று இன்று புதன்கிழமை கொண்டுவரப்படவுள்ளது.

குறித்த பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவஸத்தினால் முன்வைக்கப்படவுள்ளது.

  Comments - 0

  • Nallavana Wednesday, 20 June 2012 03:32 AM

    அவங்கட காசில அவங்க படிச்சி டாக்டர் ஆனா உங்களுக்கு என்ன? இலவசக் கல்வில படிச்சித்தான் டாக்டர் ஆகனுமா? எல்லா விடயங்களிலும் கையடிக்க கூடாது. நாட்டுக்கு நல்லது செய்வோம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X