2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

வற்றாளை கிழங்கு திருடிய நபர் விளக்கமறியலில்

Super User   / 2012 ஜூன் 27 , மு.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (லக்மால் சூரியகொட)

கொள்ளுபிட்டி வீதியோரத்தில் கொழும்பு மாநகர சபையினால் வளர்க்கப்பட்ட வற்றாளைக் கிழங்குகளை திருடிய குற்றச்சாட்டுக்குள்ளான நபரை ஜூலை 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை பதில் நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

கொழும்பு மாநகர சபையினால் வளர்க்கப்படும் வற்றாளைக் கிழங்குகளை மேற்படி சந்தேக நபர் திருடியதை தான் கண்டதாக கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இச்சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பொலிஸார், கொழும்பு நகரை அழகுபடுத்துவதற்காக வளர்க்கப்பட்ட வற்றாளையை சேதப்படுத்தியதன் மூலம் இந்நபர் குற்றம் புரிந்துள்ளதாக தெரிவித்தனர்.

அதேவேளை, சந்தேக நபர் மனநிலை பாதிப்புக்குள்ளானவர் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து, சந்தேக நபர் தொடர்பாக உளவியல் நிபுணரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் சந்தேக நபரை ஜூலை 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு கோட்டை பதில் நீதவான்  உத்தரவிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X