2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் அநாகரிகமாக நடந்துகொண்டோருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 27 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு கடற்கரைப் பூங்காவில் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்;டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அறுவருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்ரா யூ.ஜயசூரிய தலா 1500 ரூபா அபராதம் விதிக்க தீர்ப்பளித்தார்.

நீர்கொழும்பு கடற்கரைப் பூங்காவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸாரால் மேற்படி ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை பொலிஸார் மன்றில் ஆஜர் செய்த போது மேற்படி அபராதத் தொகையை விதித்த நீதவான், தொடர்ந்தும் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என பிரதிவாதிகளை எச்சரித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X