2026 ஜனவரி 21, புதன்கிழமை

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா )

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 11ஆம் இலக்க பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள 35 வயது மதிக்கத்தக்க நபரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரி நீர்கொழும்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி தலையில் பலத்த காயத்துடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரினால் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அன்றையதினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த நபரும் யார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் காயமடைந்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது பெயர் தினேஷ் என வைத்தியசாலைத் தாதியிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

5அடி 6 அங்குலம் கொண்ட குறித்த நபரின் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்டுள்ளதாகவும் மீசை இல்லை எனவும் குறித்த நபரின் வலது முழங்காலின் கீழ் பெரிய காயம் ஒன்றின் அடையாளம் காணப்படுவதாகவும் வலது முழங்கையின் கீழ் பகுதியில் வெட்டுக்காயம் ஒன்றின் அடையாளம் காணப்படுவதாகவும் மீசை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X