2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதிக்கு எப்போதும் உதவுவோம்: றிஸ்வி முப்தி

Super User   / 2012 ஜூலை 16 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(றிப்தி அலி)


எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எப்போதும் உதவி வழங்குவோம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.

இந்த உதவி ஜெனிவாவுடன் நின்று விடாது தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி கோரும் நிகழ்வு அமைச்சர் றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பட்டில் இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி,

"எமக்கு மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவது வழமை. குறித்த பிரச்சினைகள் எமக்கு மத்தியிலேயே தீர்க்க வேண்டும். இப்பிரச்சினை நாட்டுக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும். ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளின் நுழைய அனுமதிக்க முடியாது.

எமது நாட்டில் ஒருபோதும் முஸ்லிம்களினால் பிரச்சினை ஏற்படுத்தப்படமாட்டாது. முஸ்லிம்களிற்கு எதிராக ஏற்படும் பிரச்சிரனைகளின் போது இறைவனிடம் பிரார்த்திப்போம். தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை இடம்பெற்ற போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இருக்கவில்லை. எனினும் குறி;த்த பிரச்சினையை சுலபமாக தீர்க்கவே நாங்கள் முற்பட்டோம்.

அதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வகையில் அல்லாஹ்விடம் கையேந்தினோம். தற்போது அந்த பிரச்சினை சுலபமாக தீர்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்களை விரட்டியமைக்காக 2009ஆம் ஆண்டு இறைவனின் உதவியால் விடுதலை புலிகள் அழிக்கப்பட்டனர். இதே போன்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கும் இவ்வாறே அழிவுகள் ஏற்படும்" என்றார்

அத்துடன் நாட்டுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம்கள் பிரார்த்திப்பது போன்று வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காவும் பிரார்த்திக்க வேண்டும். அத்துடன் அரபு நாடுகளும் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவ வேண்டும் எனவும் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி கோருவதற்காக இணையத்தளமொன்றும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








  Comments - 0

  • Kanavaan Monday, 16 July 2012 06:57 PM

    பள்ளிவாசல்கள் உடைக்கப் படும் வேகத்தைப் பார்க்கும்போது முப்தி அவர்கள் கூறுவது போன்று பிரார்திக்கப் பள்ளிவாசல்கள் மிஞ்சுமோ தெரியாது.

    Reply : 0       0

    pasha Tuesday, 17 July 2012 02:57 AM

    ஜெனிவா இலவச பயனம் இன்னும் மறக்கவில்லை போலும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X