2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சுயதொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 19 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா )


சுயதொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சமுர்த்தி அதிகாரசபை நீர்கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நீர்கொழும்பு உடையார் தோப்பு பிரஜா சேவை நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. 

தையல் இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், அவுன், கிரைண்டர் உபகரணங்கள் என்பன நீர்கொழும்பு இரண்டாம் சமுர்த்தி வலயத்தை சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டன. பிட்டிபனை சமுர்த்தி வலயத்தை சேர்ந்த பெண்களுக்கும் இவ்வாறான  உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவ்விரண்டு வலயங்களிலும் 120 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சுயதொழிலுக்கான உபகரணங்களை பெற்றுக்கொண்ட பயனாளிகள் அவ்வுபகரணங்களுக்கான பணத்தை 50 சதவீத வட்டியின்றிய இலகு தவணை முறையில் செலுத்த வேண்டுமெனவும் மிகுதி 50 சதவீதம் அரசாங்கத்தின் உதவியால் இலவசமாக வழங்கப்படுவதாகவும்; அங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ.ஆர்.அலவத்த, பிரதேச செயலகத்தை சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X