2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

களுத்துறை பிரதேச சபைத் தவிசாளர் லஞ்சக் குற்றச்சாட்டில் கைது

Super User   / 2012 ஜூலை 27 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை பிரதேச சபைத் தவிசாளர் விதான பத்திரணகே லக்ஷ்மன், லஞ்ச ஊழல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகொட பிரதேசத்திலுள்ள காணியொன்று தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்காக30 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லக்மி ஜயவிக்கிரமவின் நெறிப்படுத்தலின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

7 ஏக்கர் பரப்பளவிலான காணியொன்றை அபிவிருத்தி செய்வதற்கும் அதற்கான பாதையொன்றை வழங்குவதற்கும் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரதேச சபைத் தவிசாளரின் அலுவலக உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர்கள் இருவரும் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். (சனத் டெஸ்மன்ட்)




  Comments - 0

  • Failan Friday, 27 July 2012 05:36 PM

    பரவாயில்லை இலங்கையில் நீதி இன்னும் உயிருடன் உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X