2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சட்ட முதுமானி பட்டம் பெற்றார் அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட முதுமானி கற்கையினை நிறைவு செய்த நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் சட்ட முதுமானி பட்டத்தை பெற்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டத்தினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இதன்போது, கொழும்பு பல்லைக்கழக வேந்தரான ஆயர் ஒஸ்வெல்ட் ஹேமிஸினால் அமைச்சர் ஹக்கிமிற்கு பட்டம் வழங்கப்பட்டது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளரும் கல்முனை பிரதி மேயருமான நிசாம் காரியப்பர் மற்றும் அக்கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் சட்ட முதுமானி பட்டத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .