2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வெலிஹேனவில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு - வெலிஹேன பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி பு நிலையம் ஒன்றை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் இருவரை கைது செய்ததுடன் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத கசிப்பு மற்றும் கசிப்பு தாயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் வசந்த ஹேரத் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து வெலிஹேன பாத்திமா வீதியில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் இரகசியமாக செயற்பட்டு வந்த இந்த கசிப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் வெலிஹேன பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். சோடா 21600 டிராம்ஸ், கசிப்பு 360 டிராம்ஸ், சீனி 100 கிலோகிராம், டி.சி.எல். பக்கட்டுக்கள், கேஸ் சிலிண்டர், அடுப்பு உட்பட கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரசோதகர் நிசாந்த ஹேரத்தின் ஆலோசனையில் பொலிஸ் பரிசோதகர் வசந்த ஹேரத் தலைமையிலான குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X