2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வீதி விபத்தில் கணவன், மனைவி பலி; மகன் படுகாயம்

Super User   / 2012 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூகொட, பள்ளேவெல- போகலகம வீதியில்  லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் இன்று மோதிக்கொண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கணவனும் மனைவியும் பலயானதுடன் அத்தம்பதியின் 9 வயது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இம்மூவரும் காயமடைந்த நிலையில் வட்டபிட்டுவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அத்தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். அவர்களின் 9  வயது மகன் ஆபத்தான நிலையில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

திவுலபிட்டிய நலாபானவை சேர்ந்த வர்த்கரான வின்சன்ட் மல்லவராய்ச்சி, அவரின் மனைவி ஸ்வர்ணகாந்தி சிறிமான்ன ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லொறியின் சாரதி மீரிகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். (புஷ்பகுமார மல்லவாராய்ச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X