2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

படகு விபத்துக்குள்ளானதால் இருவர் பலி

Super User   / 2012 செப்டெம்பர் 02 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா – எல தடுகம் ஓயா நதியில் பயணம் செய்த படகொன்று பழைய கொங்கிறீட் தூண் ஒன்றில் மோதியதால் அப்படகிலிருந்தவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இப்படகு, ஏனைய படகுகளுடன் போட்டியிட்டுக்கொண்டு அதிக வேகத்தில் இசென்றதாக  பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அப்படகில் ஐவர் பயணம் செய்ததாகவும் அவர்களில் மூவர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஏனைய இருவரும் கரைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு ஆண்களும் சீதுவையிலுள்ள தேவாலயமொன்றின் திருவிழாவுக்கு வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு பலகத்துறை - கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 37 மற்றும் 48 வயதுடைய குடும்பஸ்த்தர்களே சம்பவத்தில் பலியானவர்களாவர்.

இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. (சுபுன் டயஸ், கே.என்.முனாஷா)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X