2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சிரேஸ்ட அரசியல்வாதி விஜயபால மென்டிஸின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

Super User   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

காலஞ்சென்ற சிரேஸ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான விஜயபால மென்டிஸின் இறுதி கிரியைகள் இன்று மாலை நீர்கொழும்பு கொட்டுவ நகர சபை மைதானத்தில்; நடைபெற்றது.

இதற்கு முன்னர் பிற்பகல் 2 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட இரங்கல் உரை அமைச்சர் டலஸ் அலகப்பெருமவினால் வாசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரிய மற்றும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.

பின்னர் மீரிகமை வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து நீர்கொழும்பு மாநகர சபைக்கு அன்னாரின் பூதவுடல் கொண்டுவரப்பட்டு மாநகர சபை மேயர் மற்றும் உறுப்பினர்களினால் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து  அங்கிருந்து நீர்கொழும்பு கொட்டுவ நகர சபை மைதானத்தில் இறுதி கிரியை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X