2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

யுவதிக்கு தொலைபேசியில் காதல் அழைப்பு விடுத்தவர் நெருக்கடியில்

Super User   / 2012 செப்டெம்பர் 12 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (லக்மால் சூரியகொட)

கொள்ளுபிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் பணியாற்றும் யுவதியொருவருக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு விடுத்து, அந்த யுவதியை தான் காதலிப்பதாகவும் அவரை சந்திக்க விரும்புவதாகவும் கூறியதாக குற்றம்சுமத்தப்பட்ட நபர் ஒருவரை கைது செய்வதற்காக  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்நபர் தனது தொலைபேசி இலக்கத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டார் எனத் தெரியவில்லை எனவும் வௌ;வேறான ஐந்து தொலைபேசி இலக்கங்களிலிருந்து தனக்கு அழைப்பு கிடைத்ததாகவும் பொலிஸாரிடம் குறித்த மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.

இத்தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு செல்லிடத் தொலைபேசி சேவை வழங்கும் ஐந்து நிறுவனங்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X