2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வேர்ட்பிளாஸ்டர்ஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Super User   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


பகிரங்க பேச்சுக்கலை மற்றும் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கும் சர்வதேச அமைப்பான டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நெஷனலின் ஓர் அங்கத்துவ கழகமான வேர்ட்பிளாஸ்டர்ஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் புதிய நிர்வாகக் குழுவின் பதவியேற்பு வைபவம் அண்மையில் கொழும்பு கோல்வ் கழகத்தில் இடம்பெற்றது.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நெஷனலின் பிரதேச ஆளுர் நளின் சில்வா, வேர்ட்பிளாஸ்டர்ஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் புதிய தலைவர் நளீவ் கிட்சிலுக்கும் ஏனைய நிர்வாகிகளுக்குமான பதவிப் பிரமாணங்களை செய்து வைத்தார். பதவி விலகிக்செல்லும் ஸ்தாபகத் தலைவரான டயன் அபேவர்தன வரவேற்புரை நிகழத்தினார். நிரஞ்சன் டி சில்வா பிரதான உரை நிகழ்த்தினார்.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நெஷனலின் பிராந்திய ஆளுநர் சுனில் டி சில்வா, வேர்ட்பிளாஸ்டர்ஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் புதிய தலைவர் நளீவ் கிட்சில் ஆகியோரும் உரையாற்றினர்.

கொழும்பு டோஸ்ட்மாஸ்டர்ஸ், ரல்வ் டோஸ்ட்மாஸ்டர்ஸ், செரண்டிப் டோஸ்ட்மாஸ்டர்ஸ், நேஷன்ஸ் ட்ரஸட் டோஸ்ட்மாஸ்டர்ஸ், சி.ஐ.எம். டோஸ்ட்மாஸ்டர்ஸ் ஆகிய டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகங்களின் அங்கத்தவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இதில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ)
















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X