2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

விபத்தில் பல்கலை மாணவர் இருவர் பலி; கொலையென சந்தேகிக்கின்றது அ.ப.மா.ஒ

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – கண்டி வீதி, இம்புல்கொட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களது மரணம் கொலையாக இருக்கலாம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

தமது மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான மேற்படி மாணவர்கள் இருவரும் தற்போது நாடு முழுவதும் இடம்பெற்று வரும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை எடுத்து வருவதற்காக சென்ற வேளையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்து திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சஞ்ஜீவ பண்டார மேலும் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, இன்று அதிகாலை 4.30 மணியளவில் இம்புல்கொட பகுதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு மற்றும் மாத்தளைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் றுகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர்கள் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X