2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்கு இலவச சிறுவர் திரைப்படக் கண்காட்சி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, இலங்கை தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் கல்வி அமைச்சின் வலயக் கல்வி பணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் முதலாம் திகதி மாணவர்களுக்கென விசேட இலவச திரைப்படக் காண்காட்சி ஒன்றை நடத்தவுள்ளது.

இதனடிப்படையில், சிங்கள, தமிழ், ஆங்கில திரைப்படங்கள் நாடுதழுவிய ரீதியில் காணப்படும் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட திரையரங்குகளில் காண்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி காலை 8 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள 'ராஜா' திரையரங்கில் 'செந்தூரதேவி' திரைப்படமும் 'செல்லா' திரையரங்கில் 'குட்டிப் பிசாசு'  திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளன.

இத்திரைப்படங்களை பார்வையிடுவதற்காக மாணவர்களுக்கு விசேட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட திரையரங்குகளில் காட்சிப்படுத் ஏற்பாடு செய்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X