2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சாதனையாளர்கள் கௌரவிப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மருதானை டவர் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இக்கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ராஜரட்டை பல்கலைக்கழகத்தின் குழந்தை நல மருத்துவ பிரிவின் பீடாதிபதி டாக்டர் ரைஸ் முஸ்தபாவும் சிறப்பு அதிதியாக பெண்ணியல் மருத்துவ நிபுணரான பிர்தவ்சியா நியாஸும் சிறப்பு பேச்சாளராக சாபிர் ஹாசிமும் கலந்துசிறப்பித்தனர்.

இதன்போது, குறிப்பிட்ட காலப்பகுதியொன்றிற்குள் பாடசாலையிலிருந்து உள்வாரியாக பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரி ஆகியவற்றிற்கு தெரிவாகி சாதனை படைத்த மாணவிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியைகள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர் தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்ற பாத்திமாவின் மாணவியாகிய ஹாலிதாவிற்கும் விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்களின் பல்வேறு சட்ட பிரச்சினைகளுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குவதற்காக சட்ட உதவி முகாம் உட்பட பல நிகழ்ச்சித் திட்டங்களை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி பழைய மாணவியர் சங்கத்தினர் சிறந்த முறையில் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X