2026 ஜனவரி 21, புதன்கிழமை

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் பதற்ற நிலை

Super User   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – 07 வாட் பிளேஸிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டமைக்கு ஏதிராக விகாரமகா தேவி பூங்காவிற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்று  பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,  பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தண்ணீர் போத்தல்களையும் வீசியுள்ளனர். இதன் காரணமாக உயர்ஸ்தானிகராலயத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X