2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

உலக உணவுதினம் தொடர்பாக கருத்தரங்கு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 11 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


'உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பதற்காக பூமி, நீர் மற்றும் விதைகளுக்கான மக்கள் உரிமையை உறுதிப்படுத்துக' என்ற தொனிப்பொருளில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஜுப்லி மண்டபத்தில் கருத்தரங்கொன்று நடைபெற்றது.

நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் அமைப்பு (நீர்கொழும்பு) ஆகியன இணைந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

ஸ்ரீ விமுக்தி பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் சுபாசினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உலக மற்றும் உள்நாட்டு உணவுப் பிரச்சினை தொடர்பாகவும் மீனவர்களின் தொழில் மற்றும் வாழ்வாதார பிரச்சினை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸிலிருந்து வருகை தந்திருந்த லீஸா என்பவரும் அங்கு உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X