2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஆற்றுமுகத்தில் குளித்துக்கொண்டிருந்து இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு, பலகுத்துறை ஆற்றுமுகத்தில் குளித்துக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் நீர்கொழும்பைச் சேர்ந்த நஸ்ரத் (வயது 6) மற்றும் பேருவளையைச் சேர்ந்த ரஹமதுல்லா (வயது 9) ஆகிய இரு சிறுவர்களே உயிரிழந்தவர்களாவர்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் கலந்துகொள்வதற்காக பேருவளையிலிருந்து சென்ற குடும்பமொன்று இன்று முற்பகல், நீர்கொழும்பிலுள்ள தங்களது உறவினர்கள் சிலருடன் மேற்படி ஆற்றுமுகத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது மேற்படி இரு சிறுவர்களும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் அச்சிறுவர்களின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன.

சிறுவர்களின் உடல்கள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X