2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கைத்தொழிலாளர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் கலந்துரையாடல்

A.P.Mathan   / 2014 ஜனவரி 03 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு மூலப்பொருட்களை இலகுவாகவும், மலிவாகவும் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றைய தினம் (03) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
 
பல்வேறு துறைகள் சார்ந்த கைத்தொழிலாளர்கள் இக்கலந்துரையாடலின் போது இரும்பு, அலுமினியம், செம்பு பித்தளை, உருக்கு போன்ற மூலப்பொருட்களை இலகுவாகவும் மலிவாகவும் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டது.
 
மேற்படி அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களின் தொழில் முயற்சிகள் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
 
அத்துடன் அரச நிறுவனங்களிலிருந்து ஒதுக்கப்படுகின்ற உலோக துண்டங்களை கொள்வனவு செய்து அவற்றை மூலப்பொருட்களாக வழங்குவது பரவலாக்கப்படுமெனத் தெரிவித்தார். 
 
இச்சந்திப்பில் பிரதியமைச்சர் வீரகுமார திஸநாயக்க, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மேலதிக செயலாளர் திருமதி மங்கலிக்கா அதிகாரி, கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவர் நவாப் ரஜாப்தீன் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X