2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

முகா தலைமைக்கு வெட்கமில்லை: ரிஷாத்

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஷ்ரப் ஏ.சமத்

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தைப் பார்த்து ஜனாதிபதி கெட் அவுட் 'வெளியே போ' என்று சொல்லியும் வெட்கமில்லாமல் கூனிக் குறுகி அந்தக் கதிரையிலேயே இருக்கின்றதொரு தலைமைத்துவத்தையே நாம் காண்கின்றோம் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மீராணியா வீதியில் நேற்று (02) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் தலைமைத்துவம் ஒரு தன்மானம் உள்ளதொரு தலைமைத்துவமாக இருந்தது. அந்த தலைமைத்துவத்தை கண்டால் அன்று இருந்த ஜனாதிபதியோ, பிரதமரோ மிகவும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டனர். அவரைக் கண்டால் எழும்பி மரியாதை கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் செல்லாக் காசாக மாறிவிட்டது.

கடந்த காலங்களில் கொழும்பு வாழ் மக்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்து மாரநகரசபைக்கும், மாகாணசபைக்கும் பிரதிநிதிகளை அனுப்பினீர்கள். ஆனால் என்ன நடந்தது. அவர்கள் இந்த மக்களது பிரச்சினைகளை எங்காவது பேசீனார்களா? ஆனால் நாங்கள் உங்களது பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்போம். புதுக்கடையில் எத்தனை ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளனர்.

ஆனால் மன்னாரில் கல்முனை போன்ற பிரதேசங்களில் 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளனர். ஆகவே உங்கள் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை தெரிவுசெய்து இந்தப் பகுதிகளது பிரச்சினைகளை பேசுவதற்கு தயார்படுத்துங்கள்.

  Comments - 0

  • George Monday, 03 March 2014 05:53 PM

    முடியுமானால் வெளியே போடட்டும் என்று இருப்பதில் என்ன தவறு? றிஸாதுக்கு ஹகீமை வெளியே அனுப்ப ஆசை.

    Reply : 0       0

    Roshan Monday, 03 March 2014 06:08 PM

    இப்பதானா உங்களுக்குத் தெரியும்!

    Reply : 0       0

    M.A.A.Rasheed Tuesday, 04 March 2014 12:29 PM

    முஸ்லிம் காங்கிரஸ் சரியாக காய் நகத்துகிறது. ரிஷாட் தேவையில்லாத கதைகளை விட்டு விட்டு, சமுகத்துக்கு எதிரான கதைகளை நிறுத்தினால் நல்லது.

    Reply : 0       0

    Ash Tuesday, 04 March 2014 12:58 PM

    இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை... அவன்ட கண் ஒன்று சரி போகனும் என்ற நிலைபாட்டில் இன்று பலர் இருக்கிறார்கள்...

    Reply : 0       0

    மனிதன் Tuesday, 04 March 2014 05:27 PM

    மற்றவரை குறைகூறி அரசியல் நடத்துவதை விடுத்து, தன் செயல் திட்டங்களை எதிா்கால நல திட்டங்களை மட்டும் முன் வைத்து பேசுவதுதான் மனித நாகரிகம். 'முஸ்லிம்' என்ற அடைமொழி வைத்த கட்சி என்பதால் வாா்த்தை பிரயோகம் நல்லமுறையில் இருப்பது தான் நோ்வழி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X