2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கொழும்பு மாநகர சபைக்கு புதிய உறுப்பினர்

A.P.Mathan   / 2014 மே 07 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு மாநாகர சபையில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு நிலவிய உறுப்பினர் வெற்றிடத்திற்கு எஸ்.மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாநகரசபை உறுப்பினராக இருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் சண்.குகவரதன், தனது பதவியை ராஜினாமா செய்து, மேல்மாகாணசபை தேர்தலினூடாக மேல்மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டமையால் கொழும்பு மாநகரசபைக்கு உறுப்பினர் வெற்றிடம் நிலவியது. இவ்வெற்றிடத்திற்கு, அக்கட்சி சார்பில் 2011ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற தேர்தலில் 1447 வாக்குகளைப் பெற்ற எஸ்.மகேஸ்வரன் இன்று புதன்கிழமை, கட்சியின் தலைவரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான மனோ கணேசனினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில், தலைவர் மனோ கணேசன் முன்னிலையில் மகேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் மேல்மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன், கட்சியின் உப தலைவர் வேலணை வேணியன், ஊடக செயலாளர் பாஸ்கரா உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கொழும்பு மாநகரசபை தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி 26,229 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X