2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தொழில் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி

Kogilavani   / 2014 மே 08 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 90 மில்லியன் யூரோக்களை கடன் உதவியாக வழங்க முன்வந்துள்ளதாக ஈழமக்கள் ஜனாநாயக முன்னணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஹேர்மன் வேன் றொம்பியூ உள்ளடங்கலான பிரதிநிதிகளுக்கும் இடையில் நிகழ்ந்த கலந்துரையாடலின் போதே இவ் உதவித்திட்டம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

மேற்படித் தொகையானது வங்கிகள் ஊடாக சலுகைக் கடன்கள் அடிப்படையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

நிதி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் இத்திட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு இணைந்து செயற்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .