2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வீதியில் முளைத்த வாழை மரங்கள்

Kanagaraj   / 2014 மே 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு நகரின்  பிரதான வீதியொன்றில் இரண்டு வாழை மரங்கள் முளைத்துள்ளன. இதனை வீதியில் பயணிப்போர் ஆச்சரியத்தடன் பார்வையிட்டபடி செல்கின்றனர்.

நீர்கொழும்பு ரயில் நிலையம் முன்பாக அமைந்துள்ள ராஜபக்ஷ புரோட்வே  வீதியின் நடுவில் காணப்படும் குழிகள் இரண்டிலேயே இந்த வாழை மரங்கள் நாட்டப்பட்டுள்ளன

இந்த வீதியில் நீண்டகாலமாக இரண்டு குழிகள் காணப்படுவதாகவும், அதன் காரணமாக வீதியில் பயணிப்போர் பாரிய  சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அன்றாடம் பெருமளவானோர் பயன்படுத்தும் இந்த வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையோ, மாநகர சபையோ அல்லது பிரதேச அரசியல்வாதிகளோ கவனத்தில் கொள்வதில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இந்த குழிகள் இரண்டையும் புணரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X