2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

விபத்து: இருவர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 15 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு, தளுபத்தை பல்லன் சேனை வீதியில் பிரயாணித்த முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஞாயிற்றுக்கிழமை (15) நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்த்திசையில் வந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து காரணமாக முச்சக்கர வண்டியின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X