2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நீர்கொழும்பு மீனவர்கள் சத்தியாக்கிரக போராட்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 16 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கடந்த 12 மாத காலமாக வழங்கப்படாதுள்ள மண்ணெண்ணெய் மானியத்தை வழங்குவதோடு இதுவரை தமக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரி  நீர்கொழும்பு சிறு மீன் பிடித்துறை மீனவர்கள் திங்கட்கிழமை(16) சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியை தொடர்ந்து, நீர்கொழுமபு மாநகர சபை முன்றலில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சத்தியாக்கிரக போராட்டம் தொடரும் என மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துளள்னர்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறு மீன்பிடித்துறை மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வில்லை எனவும், இதன் காரணமாக நகரில் மீனுக்கு தட்டுப்பாடு நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X