2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இரண்டாவது நாளாக தொடரும் மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 17 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு   கடந்த 12 மாதங்களாக  வழங்கப்படாதுள்ள  மண்ணெண்ணெய் மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும் இதுவரையில்  வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரி  நீர்கொழும்பு சிறு மீன்பிடித்துறை மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட  சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

நீர்கொழும்பு மாநகரசபை முன்றலில் முன்னெடுக்கப்படும்  இச்சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு  ஆதரவாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

தங்களது  கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு  அரசாங்கம்  உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறுத்திவிட்டு சாகும்வரையான  உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மீனவர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இம்மீனவர்களின் சத்தியாக்கிரக  போராட்டம் காரணமாக நீர்கொழும்பு கொட்டுவ மைதானம் அருகிலுள்ள மீன்  சந்தை நேற்று திங்கட்கிழமையிலிருந்து  மூடப்பட்டு வெறிச்சோடியுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X