2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பாணந்துறை நோலிமிட்டில் தீ; கட்டடம் நாசம்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை வைத்திய சாலைக்கு அண்மையிலுள்ள ஆடை வர்த்தக நிலைய (நோ லிமிட்) கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 3.15 மணிமுதல் 5 மணிவரையிலும் தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் முயன்றபோதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.

களுத்துறை,கொழும்பு மற்றும் ஹோரணையிலிருந்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினருக்கு சொந்தமான ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றபோதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.

தீயணைப்பு படையினர் கொண்டுவந்த தண்ணீர் போதாமை காரணமாகவே தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அவர்களால் முடியாமல் போனதாகவும் முழு கட்டடத்ததையும் காலை 5.30 க்கு தீ முழுமையாக  சாம்பராக்கிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவியவேளையில் அந்த கட்டடத்திலிருந்த எழுவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X