2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

தளுபத்தையில் நுளம்பு பெருக்கம்: மக்கள் விசனம்

Kogilavani   / 2014 ஜூன் 26 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸெட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு – தளுபத்தை, பல்லன்சேனை பிரதேசத்தில்  நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம்;சாட்டுகின்றனர்.

தளுபத்தை பிரதேசத்தில் உள்ள பிரதான ஒழுங்கைகளான விளையாட்டு மைதான மாவத்தை, ரெஜின மாவத்தை, எக்கமுத்து மாவத்தை, விக்டோரியா மாவத்தை உட்பட பல ஒழுங்கைகளை ஊடறுத்துச் செல்லும் பிரதான வடிகான் துப்பரவு செய்யப்படாததன் காரணமாக நுளம்பு பெறுக்கம் அதிகரித்துக்காணப்படுவதாகவும்   இரவு வேளையில் நுளம்பு தொல்லையினால் பெரிதும் கஷ்;டப்படுவதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர் தளுபத்தை பிரதேசத்தின் இந்த பிரதான வடிகானை சுத்திகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X