2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

விஜித்த பெர்னாந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kogilavani   / 2014 ஜூன் 27 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இசெட்.சாஜஹான்

நீர்கொழும்பில் அமைந்துள்ள நகைக்கடை மற்றும்  வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில்; இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மேல்மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை எதிர்வரும் ஜுலை மாதம் 11  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே வெள்ளிக்கிழமை(27) உத்தரவிட்டார்.

இதேவேளை, ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவன் சார்பில் பிணை கோரி நீர்கொழும்பு மேல்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை (30) விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி  நீர்கொழும்பு  பிரதான வீதியில் அமைந்துள்ள நகை மற்றும் வெளிநாட்டுநாட்டு நாணயமாற்று முகவர் நிலையத்தில் ஆயுத முனையில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் நால்வரால்; ஒன்றரைக் கோடி கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து கைதுசெய்யப்பட்டார்.
அதற்கு முன்னதாக சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர்  கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் பொலிஸ் பிணையல் விடுதலை செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X