2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ரவூப் ஹக்கீம்- தென்னாபிரிக்க குழு சந்திப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 11 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கைக்கு வருகை தந்த தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில்; ரமபோச தலைமையிலான உயர்மட்ட குழுவில் இடம்பெற்ற அந் நாட்டு வெளிவிவகார பிரதியமைச்சர் உட்பட ஏனைய உறுப்பினர்களை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (11) முற்பகல் சந்தித்து கலந்துரையாடியதாக நீதியமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இச் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி எம்.பி, கட்சியின் வெளிவிவகார பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோச தனது விஜயத்தை முடித்துக்கொண்டு புதன்கிழமை(09) நாடுதிரும்பியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X