2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இளைஞர் படுகொலை: நாலவருக்கு விளக்கமறியல்

Super User   / 2014 ஜூலை 16 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு கதிரானை பிரதேசத்தில் இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட   நால்வரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே, நேற்று செவ்வாய்க்கிழமை(15) உத்தரவிட்டார்.

தெமங் ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த தினேஸ் பிரியந்த சில்வா, திம்;பிகஸ்கட்டுவ, மகா வித்தியாலய வீதியைச் சேர்ந்த  நிஸ்ஸங்க தினேஸ் சிலவா, வடக்கு கதிரானையைச் சேர்ந்த நிரோசன் மதுரங்க, எட்டம்பகா வத்தை, தெமங் ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த தம்மிட்டகே சந்தன பெரேரா ஆகிய சந்தேக நபர்களே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரு தரப்பினரிடையே பல வருடகாலமாக நிலவிய முன் விரோதமே காரணமாகவே இக் கொலைச்சம்பவம் இடம்பெற்றமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்தது.

இக் கொலைச் சம்பவம் கடந்த  9ஆம் திகதி  நீர்கொழும்பு கதிரானை பிரதேசத்தில் இடம்பெற்றது.

நீர்கொழும்பு, எட்டம்ப கஹவத்தை, தெமங்சந்தி பிரதேசத்தைச் சேர்ந்த புரூணா என்று அழைக்கப்படும் கிரிஸாந்த திலும் சம்பத் பெர்னாந்து (27 வயது) என்ற திருமணமாகாத  நபரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

இவர் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்;று  மாலை 6 மணியளவில் தனது வீட்டிலிருந்து கதிரானைக்கு செல்வதாக வீட்டாரிடம் கூறிச் மோட்டார் சைக்கிளில் சென்ற போது; முச்சக்கர வண்யில் வந்த நான்கு சந்தேக  நபர்களும் அவரை  வழிமறித்து மிளகாய்த் தூளை வீசிவிட்டு கூரிய ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, கொலைக்கு  பயன்படுத்தப்பட்ட  கூரிய ஆயுதங்கள், மிளகாய்த் தூளின் ஒரு பகுதி, கொலை செய்யப்பட்டவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், செல்லிடத் தொலைபேசி, செருப்பு, இரத்தம் தோய்ந்த ஆடை என்பவற்றை நீர்கொழும்பு பொலிஸார்  வழக்கின் தடயப் பொருட்களாக மன்றில் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கு எதிர் வரும் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X