2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மீனவரைக் காணவில்லை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, பிட்டிபனை கடற்கரையிலிருந்து சிறிய படகொன்றில் மீன்பிடிப்பதற்குச்   சென்ற மீனவர் ஒருவர் கடந்த திங்கட்கிழமையிலிருந்து காணாமல் போயுள்ளதாக இவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

வடக்கு பிட்டிபனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அமரசிங்ககே கிறிஸ்தோபர் போல் சில்வா என்பவரேவ இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அன்றையதினம் இவர் மீன்பிடிப்பதற்கு தனியாகச்  சென்றதாகவும் உறவினர்கள் கூறினர்.

மீன்பிடிப்பதற்கு  செல்லும் இவர் மாலையில் திரும்புவது வழக்கமாகும். ஆயினும், அன்றையதினம் இவர் வீடு திரும்பாததை அடுத்து குடும்பத்தவர்கள் இது தொடர்பாக கடற்படைக்கு அறிவித்துள்ளனர். 

இதனை அடுத்து கடற்படையினரின்; டோரா படகும் மீனவப் படகுகளும் தேடியபோது, பிட்டிபனை மோயகட்டவுக்கு மூன்று கிலோமீற்றர் தூரத்தில் கம்மல்துறை கடற்பகுதியில் படகும் இஞ்ஜினும் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

புயல் காற்றில் அகப்பட்டு  படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காணாமல் போன மீனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X