2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

43 மில்லியன் ரூபாய் செலவில் நவீன சந்தை கட்டட தொகுதி

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.கே.றஹ்மத்துல்லா


மதுகம பிரதேச சபையில் 43 மில்லியன் ரூபாய் செலவில் நவீன  சந்தை கட்டிட  அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தலைமையில் திங்கட் கிழமை (09) நடைபெற்றது.

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமானம் குறைந்த உள்ளூராட்சி சபைகளை இனங்கண்டு அவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் புறநெகும செயற்திட்டத்தின் கீழ் மதுகம சந்தை கட்டட தொகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

புறநெகும திட்டத்தில் மொத்தமாக  வருமானம் குறைந்த 108 உள்ளூராட்சி சபைகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 90 ஆவது இடத்தில் மதுகம பிரதேச சபை காணப்படுகின்றது.

இக்கட்டட வேலைத்திட்டம் 2015 மார்ச் மாதம் நிறைவுபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,

'கிராமத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணத்திற்கமைய நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கேற்ப கிராமங்களுக்குத்  தலைமைகொடுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களும் பலப்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும். மக்களுக்காக மக்களின் காலடியில் நெருங்கி சேவையாற்றக்கூடிய ஒரே நிறுவனம் என்றால் அது உள்ளூராட்சி சபைகளேயாகும்.

அதற்கமையவே நமது ஜனாதிபதி நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளை அபிவிருத்தி செய்ய வழிகாட்டுகின்றார். அதன் பிரகாரம் எனது அமைச்சு நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் தேவைகளை இனங்கண்டு அவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது' என தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X