2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

Knowledge Box அங்குரார்ப்பண நிகழ்வு

Super User   / 2011 ஜூன் 19 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

Knowledge Box எனப்படும் ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை சுற்றுலா சபை கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் சிறப்புரையாற்றினார்.

கடந்த 2009 ஒக்டோபர் மாதம் Knowledge Box எனப்படும் ஊடக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட அகமும் புறமும் நிகழ்ச்சி Knowledge Box இன் கன்னித் தயாரிப்பாகும்.

இதற்கு பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் இடம்பெற்ற ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் கண்காட்சி, கடந்த மாதம் மலேசியாவில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு போன்ற பல நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து ஆவணமாக்கியதுடன் பல தொலைக்காட்சி விளம்பரங்கள், நடப்பு விவகாரங்கள் மற்றும் சமூக பிரச்சினைகள் போன்றவற்றையும் இது ஆவணப்படுத்தியுள்ளது.  Pix By: Nisal Baduge

 


  Comments - 0

  • vaasahan Tuesday, 21 June 2011 05:29 PM

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X