Gavitha / 2016 மே 11 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

அன்னையர் தினத்தன்று, தனது தாயைத் தாக்கி விட்டு, அவர் குடியிருந்த வீட்டையும் எரித்த சம்பவமொன்று, நேற்று செவ்வாய்கிழமை (10) வாதுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருதாவது,
மொராத்துடுவப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், தான் இருந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், நாங்கள் சில வாரங்களுக்கு இங்கு வசிக்கபோவதாகவும் கூறி மனைவி, குழந்தைகள் மூவருடன் தனது தாய் வீடு சென்றுள்ளார்.
சில நாட்கள் கடந்த பின்னர், குறித்த நபரின் மனைவி இடத்தையும், வீட்டையும் தங்களுக்கு எழுதி கொடுக்குமாறு மாமியிடம் முரண்பட்டுள்ளார். இதற்கு மாமி மறுப்பு தெரிவிக்கவே, மாமியைத் தாக்கிவிட்டு குழந்தைககளை அழைத்துக்குக் கொண்டு தனது தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மகன், தனது தாய் வீட்டுக்குத் திரும்பும் போது அங்கு மனைவியும் பிள்ளைகளும் இருக்கவில்லை. இதுதொடர்பில், தன் தாயிடம் விசாரித்தபோது, நடந்தவற்றைத் அத்தாய் தனது மகனுக்குத் தெரிவித்துள்ளார்.
ஆத்திரமடைந்த மகன், தாயுடன் சண்டைபோட்டுக்குகொண்டு தாயையும் அடித்து காயப்படுத்தியதுடன், தாய் குடியிருந்த வீட்டுக்கு பெற்றோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதனால், வீட்டிலுள்ள பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. தப்பிச்சென்ற நபரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர் சாரதி என்றும் தெரிவித்தனர்.
4 minute ago
17 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
21 minute ago
28 minute ago