Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
75 ரூபாயாகக் காணப்பட்ட ஆடை இறக்குமதி தொகுதியொன்றுக்கான செஸ்வரியை, 200 ரூபாயாக அரசாங்கம் திடீரென அதிகரித்துள்ளமையடுத்து, புறக்கோட்டை ஆடை இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று (03) கவனயீர்ப்பு பேரணியொன்றை நடத்தியது.
முற்பகல் 11.30 மணியளவில், புறக்கோட்டை கேஷர் வீதியில் ஆரம்பமான பேரணி, முதலாம் குறுக்கு வீதியூடாக பிரதான வீதியை அடைந்து, மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தை அடைந்தது. சுங்க நுழைவாயிலுக்கு எதிராக சுமார் ஒரு மணி நேரமாக ஒன்றுகூடியிருந்த ஆடை இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் மற்றும் வணிகர்கள், தொழிலாளர்கள், செஸ்வரியை குறைக்க வேண்டும், அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், எமது கோரிக்கைகள் நியாயமானவை என்பதை வலியுறுத்தும் பாதாகைகளை தாங்கியிருந்ததோடு,
கோஷங்களையும் எழுப்பினர் .
ஆடை இறக்குமதி சங்கத்தின் தலைவர் நஜிமுதீன், உபதலைவர் தியாகராஜா, செயலாளர் குமார பிரேமசரா உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 minute ago
8 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
10 minute ago