Kogilavani / 2016 மே 06 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
இலங்கையில் இயங்கி வருகின்ற அனைத்து இஸ்லாமிய அறபுக் கல்லூரிகளிலும் பொதுவானதொரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீமிடம் கோரிக்கை முன்வைத்தார்.
அத்துடன், பாடத்திட்டம் தயாரித்தல் தொடர்பிலான செலவீனங்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்;டேஷன் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி வழங்கினார்.
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீமுக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று புதன்கிழமை (04) நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், இதனை அமுல்படுத்துவதற்கு அமைச்சர் ஹலீம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறியதாவது, 'இலங்கையில் தற்போது பதிவுசெய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத 300க்கும் மேற்பட்ட அறபுக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. குறித்த கல்லூரிகளில் பொதுவானதொரு பாடத்திட்டம் நடைமுறையில் இல்லை. ஒவ்வொரு அறபுக் கல்லூரிகளும் தங்களது கொள்கைகளுக்கு அமைவாகவும் தமக்கு ஏற்றவாரும் பாடத்திட்டங்களை அமைத்துக்கொண்டுள்ளது. சில அறபுக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சமூகத்துக்கு எவ்வித பொறுத்தமும் இல்லாத இலக்கணங்களையும் - பாடங்களையும் உள்வாங்கியுள்ளனர்.
7,8,9 வருடங்கள் என்ற அடிப்படையில் சில கல்லூரிகளின் பாடத்திட்ட கால எல்லை அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, சில கல்லூரிகளில் எவ்வித அடிப்படை தகைமைகளும் இல்லாமல் மாணவர்களை இணைத்துக் கொள்கின்றனர்.
இதனால், அறபுக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்ற மௌலவிமார்கள் அதிக காலத்தை அறபுக் கல்லூரிகளில் செலவழிக்க வேண்டியுள்ளதுடன் தேவையானதொரு கல்வித் திட்டத்தை பெற்றுக் கொள்ளவும் முடியாதுள்ளனர்.
எனவே, இது தொடர்பில் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு விசேட கரிசனை செலுத்துவதுடன், உடனடியாக சகல அறபுக் கல்லூரிகளுக்கும் பொதுவானதொரு பாடத்திட்டத்தை முக்கிய உலமாக்கள் - புத்திஜீவிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும். இவ்வாறு தயார்செய்யும் பாடத்திட்டத்தை சகல அறபுக் கல்லூரிகளும் அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த பாடத்திட்டம் உருவாக்குவதற்கும் - அச்சிடுவதற்கும் - விநியோகிப்பதற்கும் மற்றும் இதர செலவீனங்களையும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஏற்றுக்கொள்வதுடன், எதிர்காலத்தில் மேலும் பல சமூகம் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த இவ்வமைப்பு பூரண அனுசரணை வழங்கும்” என்றார்.
நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர், 'இலங்கையிலுள்ள அனைத்து அறபுக்கல்லூரிகளுக்கும் பொதுவான பாடத்திட்டமொன்றை அமைப்பது தொடர்பில் தெரிவுக் குழுவொன்று அமைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் ஹலீம் வாக்குறுதி வழங்கினார்.
5 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago