George / 2016 ஜூன் 02 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான ப்ரெடி கமகே, நீர்கொழும்பு மாநகரசபைக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இனந்தெரியாத இரண்டு நபர்கள், தடிகளால் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற நிலையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'செய்தி சேகரித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் ஏற முற்பட்ட போது பின்னால் வந்த நபர்கள் தன்மீது தடியடி தாக்குதல் நடத்தினார்கள்' என தாக்குதலுக்கு உள்ளான ப்ரெடி கமகே தெரிவித்தார்.
தாக்குதலையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற பின்னர், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற ப்ரெடி கமகே, முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
54 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
19 Nov 2025