2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிணறுகளின் நீரை பாவிக்க வேண்டாம்

Kanagaraj   / 2016 மே 24 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில், வெள்ளநீரினால் அசுத்தமடைந்துள்ள கிணறுகள் மற்றும் குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் மாதிரி தண்ணீரைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அக்கிணறுகளில் உள்ள தண்ணீரின் சுத்தத்தன்மை தொடர்பில் அறிவிக்கும் வரையிலும், அக்கிணறுகளின் தண்ணீரை எக்காரணத்துக்காகவும் பயன்படுத்தவேண்டாமென, நீர் முகாமைத்துவ சபை, மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீர் ஊற்றுமூலங்களில் தண்ணீரைப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டுமாயின், அதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும். தேவையேற்படின் 0718587628 / 0776528445 / 0718605592 / 0714414681 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகளை ஏற்படுத்தி, மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அச்சபையின் தலைவர் எஸ்.காதர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X