2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சுற்றுலாப் பயணியை ஏற்றி வந்த காரின் சாரதி திடீர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எம்.ஏ.பரீத்

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவரை வந்த காரின் சாரதி, தம்பலகாமம் சந்திப் பகுதியில் வைத்து திடீர் சுகவீனமுற்று தம்பலகாமம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், இன்று திங்கட்கிழமை (15) முற்பகல் 11.30க்கு இடம்பெற்றதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், கார் சாரதியான கொழும்பு, இராஜகிரியைப் பகுதியைச் சேர்ந்த ரெஜி ரொகான் செனவரட்ன யாப்பா ஆவார்.

சடலம், தம்பலகாமம் வைத்தியசாலையிலிருந்து கந்தளாய் வைத்திய சாலைக்குகொண்டுக் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X