Princiya Dixci / 2016 மே 24 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் விசேட பிரதிநிதி ஹிரோடோ இசுமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) சந்தித்து ஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ-7 மாநாட்டுக்கான ஜனாதிபதியின் விஜயம் குறித்து கலந்துரையாடினார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்காக இசுமி, இலங்கை ஜனாதிபதியுடன் ஜப்பானிய பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி உலகத் தலைவர்களுக்கு 100 நாட்கள் நிகழ்ச்சித்திட்டதின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முதல் ஜனநாயக நிறுவனங்கள், நீதிச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், மனித உரிமைகள் என்பவற்றைப் பலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவார்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள் பயங்கரவாத்துக்கு எதிரான நடவடிக்கைள் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
வளர்ந்துவரும் சந்தைகளின் மந்தநிலைமைகள், எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி போன்றவற்றின் காரணமாக சர்வதேச பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் நிச்சயமற்ற தன்மை சர்வதேச சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார வளரச்சியில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான ஒரு சாதகமான செய்தியை வழங்குவது ஜீ-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் நோக்கமாக இருக்கும்.
50 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
19 Nov 2025