2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஞானம் அறக்கட்டளையின் நிவாரண உதவி

Thipaan   / 2016 மே 30 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி, மன்னார், கண்டி, நுவரெலியா, கொழும்பு, அநுராதபுரம், கேகாலை உட்ளிட்ட 10 மாவட்டங்களிலுள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்கள், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் வழங்கப்பட்டன.

நிவாரணப் பொருட்களை தாங்கிய 15க்கும் மேற்பட்ட பாரவூர்திகள், கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்திலிருந்து, கடந்த வியாழக்கிழமை காலை பயணத்தை ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று நிவாரணப் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டன.

ஞானம் அறக்கட்டளையினரின் நிவாரணத் திட்டத்தினால், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X